விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சீமானுக்கு தேமுதிக ஆதரவா? திமுகவின் முகத்திரை கிழியும் - பிரேமலதா விஜயகாந்த்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடந்துவரும் அதிமுக உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்திற்கு, நேரில் வந்து ஆதரவு தெரிவித்த தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் இடம், நாம் தமிழர் கட்சியின் சீமான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு அதிமுக மற்றும் தேமுதிகவினர் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.

இது குறித்து பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிப்படையாகவே ஆதரவு கேட்டுள்ளார். இதற்காக நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆனால், தேமுதிகவின் நிலைப்பாடு ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாங்கள் புறக்கணிக்கிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

கடந்த அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வந்த திமுக இந்த தேர்தலை முழுவதுமாக புறக்கணிக்கிறது. இந்த தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் இந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுத்து உள்ளோம். எங்களுடைய தொண்டர்களின் நிலைப்பாடு இதுதான்.

ஈரோடு இடைத்தேர்தலில் மக்களை அடைத்து வைத்து அராஜகத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். அந்த நடவடிக்கையை எதிர்ப்பதற்காகத்தான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம்" என்றார்.

மேலும், பிரேமலதா விஜயகாந்த் தெரிவிக்கையில்,  சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யக்கூடிய அளவிற்கு அதிமுக என்ன செய்தது? கள்ளக்குறிச்சி சம்பவம் திமுகவினர் உதவியுடன் தான் நடப்பதாக தெரிவிக்கிறார்கள். 

உண்மை நிலை என்ன என்பது சிபிஐ விசாரணையில் தான் தெரிய வரும். அப்போது அவர்களின் முகத்திரை கிழியும். வேலை வாய்ப்பு இல்லாததால் தான் இளைஞர்கள் தற்போது மது போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi by poll DMDK not Support to NTK Seeman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->