ஊராட்சி மன்ற தலைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கடலூர், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளவர் தனலட்சுமி. 100 நாள் வேலை, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்ட நிதிகளை இவரது கணவர் அய்யாசாமி பயனாளிகளுக்கு கொடுக்காமல் அவரது சொந்த செலவிற்கு பயன்படுத்திக் கொள்கிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால் குப்பநத்தம் கிராம மக்கள் திடீரென இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விருத்தாச்சலம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மறியலில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். 

இன்று காலை சுமார் 7 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் 8:30 மணி வரை நீடித்தது. இருப்பினும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த ஒரு பெண் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். 

இதனால் பதற்றம் அடைந்த கிராம மக்கள் பெண் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி தூக்கி எறிந்தனர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானம் செய்து அமர வைத்தனர். 

இது குறித்த தகவல் அறிந்த விருத்தாச்சலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தனர். 

இதனை அடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் போலீசார், தீக்குளிக்க முயன்ற பெண்ணை அழைத்துச் சென்று இது போன்ற நடவடிக்கைகளில் இனிமேல் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

village council against Action woman tried bathe  fire 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->