முகநூல் காதல்.. அனாதை ஐடியை வைத்து.. பரிதாப திருமணம்.. நகை பணத்துடன் ஓடிய பெண்.. இளைஞர் ஏமாற்றம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் தாலுகாவில் சிறுதலைப்புண்டி எனும் கிராமத்தில் மணிகண்டன் விவசாய கூலி வேலை செய்து வருகின்றார். முகநூல் மூலம் இவருக்கு காரைக்காலை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 

மகாலட்சுமி தன்னை ஒரு அனாதை எனக் கூறி திருமணம் செய்ய மணிகண்டனை வற்புறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, மணிகண்டன் தனது தாய் ராணியிடம் கூறி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மகனின் ஆசையை நிறைவேற்ற அவர்கள் தங்களது உறவினர்களை கூட்டி வைத்து மணிகண்டன் மற்றும் மகாலட்சுமி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். மேலும், அவருக்கு 8 பவுன் நகையை அவர்களே போட்டு விட்டார்கள். இவர்களுக்குள் ஒரு மாதம் வரை சந்தோஷமாக திருமண வாழ்க்கை சென்ற நிலையில் டிசம்பர் 11ம் தேதி மகாலட்சுமி அவருக்கு போடப்பட்ட 8 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார். 

இது குறித்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே, செஞ்சி சரக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நிலையில் இந்த விஷயம் வெளியில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villuppuram Men Cheated By karaikkal women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->