சிறந்த திருநங்கைக்கு ரூ.1 லட்சம் பரிசு.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!
Villupuram Collector announced Rs1 lakh prize for best transgender
தமிழகத்தில் சிறந்த திருநங்கைகளுக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. விருது பெரும் திருநங்கை சாதனையாளர்களுக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதன்படி விழுப்புரத்தில் உள்ள திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் திருநங்கை விருது குறித்தான அறிவிப்பை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "விழுப்புரத்தில் உள்ள திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2022-2023ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைகளுக்கான விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெரும் சாதனையாளர்களுக்கு ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விருது பெற விருப்பமுள்ளவர்கள் தமிழக அரசின் உதவி பெறாமல் தங்களது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கையாக இருக்க வேண்டும்.
திருநங்கைகள் நல்லனுக்காக சிறப்பான சேவை புரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவை பெறவும், கண்ணியமாக வாழ்க்கை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும்.
மேலும் விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் தமிழக அரசின் திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
இவ்விருது பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 01/02/2023 முதல் 28/02/2023 மாலை 5 மணிக்குள் விழுப்புரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விருது பெற தகுதியுடையவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள்" என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்
English Summary
Villupuram Collector announced Rs1 lakh prize for best transgender