காணாமல் போன தாய்ப்பசுவை.. தேடி புகார் கொடுத்த கன்று.. விழுப்புரத்தில் சுவாரஸ்யம்.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, கஞ்சனூர் அருகில் கொட்டியாம்பூண்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர் தான் விவசாயி கோவிந்தன். இவர் தனது வீட்டில் பசுமாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை வளர்த்து வருகின்றார்.

அப்படி அவர் வளர்த்து வருகின்ற பசுமாடு திடிரென காணாமல் போய் இருக்கின்றது. தனக்கு சொந்தமான உலகலாம் பூண்டி கிராமத்திலுள்ள நிலத்தில் அமைந்துள்ள கொட்டகையில், விவசாயி கோவிந்தன் மாலை தன்னுடைய பசுமாட்டை கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். 

பின் மீண்டும் இரவு மாட்டுகொட்டகைக்கு சென்ற பொழுது மாட்டுக்கொட்டகையில் இருந்த ஒரு பசு காணாமல் போனது.இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் கஞ்சனூர் காவல் நிலையத்தில் கோவிந்தன் கடந்த 19 -ஆம் தேதி மாட்டை காணவில்லை என புகாரளித்தார். 

இதை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பசு மாட்டைத் திருடி சென்றவர்கள் பற்றி விசாரிக்காமல் 14 நாட்களாக அலட்சியமாக இருந்தனர். இதனால் கோவிந்தன், அவரது மனைவி மற்றும் அந்த காணாமல் போன பசுவின் கன்று 3 பேரும் சேர்ந்து இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திர்கு வந்து அம்மாவை காணவில்லை கண்டு பிடித்து தாருங்கள் என கன்றுக்குட்டி சார்பில் மனு அளித்தனர். இதனால், பரபரப்பு ஏற்ப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram Small Cow Complaint To collector which Missed Mother Cow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->