போக்சோ வழக்கில் லஞ்சம் வாங்கிய விருத்தாசலம் ஆய்வாளர் இடைநீக்கம்!
Viruthachalam pocso case TN Police
விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த கடுமையான குற்றச்சாட்டின் பின்னணியில், ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் தலைமைக் காவலர் (எழுத்தர்) சிவசக்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள இந்த காவல் நிலையத்தில், ஒரு போக்சோ (POCSO) வழக்கை மையமாகக் கொண்டு லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மையுடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல் நிலைய ஆய்வாளரும், தலைமைக் காவலரும் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜெயலட்சுமி மற்றும் சிவசக்திக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு, அந்த பரிந்துரையை விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் ஏற்றுக் கொண்டு, இருவருக்கும் பணியிடை நீக்கம் விதிக்கப்பட்டது.
English Summary
Viruthachalam pocso case TN Police