விருதுநகரை அதிரவிட்ட வெடி விபத்து.. மேலும் ஒருவர் கைது.. ரூ.12 லட்சம் நிவாரணம்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கண்டப்பன்குளத்தில் அவியோரை சேர்ந்த சேதுராமன் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது வெடி மருந்து கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த வெடி பொருட்கள் நிரம்பிய வேலையிலிருந்து வெடிபொருட்கள் இறக்கி வைத்துக் கொண்டிருந்தபோது உராய்வு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. 

இந்த சம்பவத்தில் கந்தசாமி, துரை, முனுசாமி ஆகிய மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கும் முழுமையாக தரைமட்டமானது. இந்த நிலையில் வெடி விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் குவாரி உரிமையாளர் சேது என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ராஜ்குமார் என்பவரை தேடி வந்த நிலையில் தற்போது அவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே வெடிவிபத்தில் உயர்ந்தவர்கள் குடும்பத்திற்கு கல்குவாரி நிர்வாகம் சார்பில் தலா 12 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ.50,000 மற்றும் காசோலையாக ரூ.11,50,000  உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruthunagar blast one more person arrested 12 lakhs relief


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->