தேர்தல் நேரம் வரும்போது மட்டும் எங்கள் ஞாபகம் வருமா? ஜோதிமணியை சுத்து போட்ட வாக்காளர்! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பங்கேற்பதற்காக வருகை புரிந்து இருந்தார். 

அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் ஜோதி மணியை நோக்கி, ''தேர்தல் நேரம் வரும் போது மட்டும் தான் எங்கள் ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டும்தான் வந்திருக்கிறீர்கள், அதற்குப் பிறகு இந்த பகுதியில் உங்களை பார்க்க முடியவில்லை. 

நன்றி தெரிவிக்க கூட நீங்கள் வரவில்லை'' என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி தெரிவிக்கையில், பல்வேறு இடங்களில் சென்று தொகுதியில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். 

என்னிடம் நீங்கள் வேண்டுமென்றே தகராறில் ஈடுபடுகிறீர்கள் என்று ஆவேசமாக பதில் அளித்தார். 

ஆனால் கேள்வி எழுப்பிய நபரோ எதையும் கண்டு கொள்ளாமல் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ஒரு முறையாவது எடுத்து பேசி உள்ளீர்களா? நாங்கள் யாரிடம் சென்றது என்று கோரிக்கைகளை தெரிவிப்பது. 

எம்.பி யான உங்களிடம் தானே பேசமுடியும் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 

கிராம சபை கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை சூழ்ந்து கொண்டு, ஜோதிமணி இடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ஜோதிமணி எம்.பியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வாக்காளர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் பின்னணியில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஒருவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

voter question congress MP Jothimani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->