நடுரோட்டில் தாறுமாறாக ஓடிய கார்! வாலிபர்களை பிடித்து கும்மி எடுத்த பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் இருந்து கார் ஒன்று நேற்று இரவு அதிவேகமாக வந்தது. அந்த கார் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்று கொண்டிருந்த கார், இருசக்கர வாகனம் மற்றும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று கொண்டிருந்தது. 

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காரை விரட்டிச் சென்று தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே மடக்கி பிடித்தனர். 

பின்னர் அந்த காரில் இருந்த 2 வாலிபர்களை காரை விட்டு வெளியே அழைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலீசார் வாலிபர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ், சேத்தன் என்பதும் தெரியவந்தது. 

மேலும் அவர்கள் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் மது போதையில் காரை ஓட்டி வந்ததாக தெரிவித்துள்ளனர். 

அதிர்ஷ்டவசமாக கார் மோதியதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

washermenpet car accident youth attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->