இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரருக்கு கொரோனா உறுதியானது.!
Washington Sundar Affected corona
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரும், இடது கை பேட்ஸ்மேனான வாஷிங்டன் சுந்தருக்கு இன்று கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்த நிலையில், அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பதால், அவர் இந்த ஒரு நாள் தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏற்கனவே காயம் காரணமாக கடந்த 10 மாதங்களாக அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டு, தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.
அதன் பலனாகத்தான் தற்போது தென் ஆப்பிரிக்கா இந்தியா ஒருநாள் தொடரில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி இருப்பது, அவர் இந்த ஒருநாள் தொடரில் ஆடுவாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் வருகின்ற 19ஆம் தேதி தொடங்க உள்ளது.
English Summary
Washington Sundar Affected corona