#BigBreaking:: மக்களே உஷார்.. "கொரோனாவால் பலி".. தமிழகத்திலும் இனி கட்டாயம்..!!
Wearing face mask is mandatory in Tamil Nadu
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மருத்துவமனை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருக்கக்கூடிய உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது போல திரையரங்கங்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் முக கவசம் அணிவது குறித்தான விரிவான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிட பொது சுகாதாரத்துறை ஆயுத்தமாகி வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தினசரி கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் நோய் தொற்று பரவலை குறைப்பது குறித்தும் பல்வேறு வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதார துறை அனுப்பி உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த பார்த்திபன்(54) என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 23ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்ட பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
English Summary
Wearing face mask is mandatory in Tamil Nadu