களைகட்டும் தீபாவளி!...ஒரே நாளில் 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு!
Weeding diwali in one day 4 lakh people invaded their hometowns
சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திங்கள் கிழமை முதலே கிளம்பி வருகின்றனர்.
இதற்கிடையே, ரயிலில் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இருந்த போதிலும் சென்னை எழும்பூர், சென் ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சுங்கச்சாவடிகளிலும் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 1 லட்சம் பேர் பயணித்ததாக தகவல் வெளியானது. நேற்று மட்டும் சுமார் 2 அரை லட்சம் முதல் 4 லட்சம் பேர் பேருந்துகள், ரெயில்கள், கார்களில் புறப்பட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.
English Summary
Weeding diwali in one day 4 lakh people invaded their hometowns