கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணியின் போது, 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் பலி.!
west bengal labout died in kalaingar memorial library madurai
மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணியில் கொத்தனார் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளி கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து பலியாகியுள்ளார்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ரூ.114 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன.
இந்த கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணியில் கொத்தனார் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளி ஒருவர் கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து பலியாகியுள்ளார்.
ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த அந்த வடமாநில தொழிலாளி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் வசித்து வந்த இக்பால் ஆவார். இவர் கடந்த 6 மாதங்களாக இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து விழுந்து இருக்கிறார்.
English Summary
west bengal labout died in kalaingar memorial library madurai