நடிகர் பிரகாஷ் ராஜிக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்மந்தம்? - எல்.முருகன்!! - Seithipunal
Seithipunal


பாஜக தோல்வி அடைவதற்கான எல்லா வேலையும் மோடி செய்துவிட்டார் என பிரகாஷ் ராஜ் கூறிய நிலையில் அதற்கு பதிலடி குடுக்கும் விதமாக , " நடிகர் பிரகாஷ் ராஜிக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பத்தம்?அவர் என்ன சாதித்தார் ? " என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ்ராஜ் பேசுகையில், கலைஞரின் என்னிடம் அன்பாக நடந்து கொள்வார். கலைஞர் விட்டுச் சென்ற கொள்கையின்படி முதல்வர் மு க ஸ்டாலின் பயணிக்கிறார் என பேசினார்.

காந்தி திரைப்படம் வந்த பிறகுதான் காந்தியை பற்றி மக்கள் புரிந்து கொண்டார்கள் என மூடி கூறியதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரகாஷ்ராஜ், மோடி கன்னியாகுமரிக்கு வந்ததுக்கு பிறகு தான் கன்னியாகுமரி ஒன்னு இருக்கிறது தெரியும். பாஜக தோக்கறதுக்கான எல்லா வேலையும் மோடி செய்துவிட்டார் என்று பேசினார்.

இந்த நிலையில் மதிய இணை அமைச்சர் எல் முருகன் மதுரையில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்திகளை சந்தித்த எல் முருகன் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களின் நலனுக்காகவும் நாட்டிற்காகவும் உலக மக்களின் நலனிற்காகவும் தியானம் செய்கிறார். அவர் தேர்தலுக்காக இன்று தியானம் செய்யவில்லை. சிறு வயதில் இருந்தே தியானம் செய்து வருகிறார். 

பாஜக தோற்பதற்கான எல்லா வேலையும் மூடி செய்துவிட்டார் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு பதிலளித்த எல். முருகன்,  தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம். அவர் என்ன சாதித்து இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is the relationship between actor Prakash Raj and Tamil Nadu LMurugan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->