ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் எப்போது?...நாள் குறித்து தமிழக அரசு உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில்  குடியரசு தினமான நாள் ஜனவரி, தொழிலாளர் தினமான மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மார்ச் 22 மற்றும் உள்ளாட்சி நாள் நவம்பர் 1 ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம சபைகளும் ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுவது வழக்கம்.

அதன் படி, நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த  நிலையில், சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் 23-ம் தேதி காலை 11 மணிக்கு  நடத்த வேண்டும் என்றும், கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

When is the postponed gram sabha meeting tamil nadu government order about the date


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->