ஆறுதல் கூறசென்ற இடத்தில் சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் கூறச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கும் அப்பகுதி திமுகவினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில்  கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவரின் குடும்பங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறிய வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகையும் சாட்டை என்ற யூப்டியூப் சேனலில் உரிமையாளருமான சாட்டை துரைமுருகன் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்றார்.

காரிலிருந்து இறங்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துறைமுருகனைக் கண்ட அப்பகுதி திமுகவினர் சாட்டை துரைமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.

ஆளும் திமுக கட்சிக்கு எதிராகவும் ஆளும்கட்சி எம்எல்ஏ குறித்தும் ஆதரவாக பேசியதாக சாட்டை துரைமுருகனிடம் வாக்குவாதம் செய்த திமுகவினர் சாட்டை துரைமுருகனை தாக்கம் முயன்றனர். பதிலுக்கு சாட்டை துரைமுருகனும் தாக்கினார்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை முருகனை காரில் ஏற்றி வழி அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Whip kick to Duraimurugan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->