இவர்களை யார் தூண்டி விட்டது! ஓசி பஸ்ஸுக்கு எதிராக பொங்கிய பெண்கள்! - Seithipunal
Seithipunal


பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த பெண்கள்!

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ராயர் பாளையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்களை ஏற்றாமல் அரசு பேருந்து நிற்காமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராயர் பாலத்தை சேர்ந்த பெண்கள் சித்தோடு வழியாக பெருந்துறை நோக்கி செல்லும் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்ததாக சொல்லப்படுகிறது. பெண்களுக்கு இலவசம் என்பதால் கலெக்ஷனுக்கு குறையும் தினப்படியும் குறையும் என்பதால் அந்த பெண்களை கண்டதும் பேருந்து ஓட்டுனர்கள் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

மூன்று பேருந்துகள் நிற்காமல் சென்ற நிலையில் நான்காவதாக வந்த பேருந்தை மறித்து ஏறி சென்றுள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் பேருந்து நடத்தினரிடம் வாக்குவாதம் செய்தனர். வெயிலில் மூன்று மணி நேரமாக பேருந்திற்காக காத்திருக்கும் பொழுது ஏற்றாமல் சென்றது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். 

இலவசங்களால் விலைவாசி உயர்ந்து விட்டது! எங்களுக்கு ஓசி பயணம் வேண்டாம்! பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் தருமாறு பேருந்து நடத்துனரிடம் கண்டிப்பாக கேட்டுள்ளனர். செய்வது அறியாது விழிப்பிதுங்கி நின்ற நடத்தினர் அவர்களிடம் பதில் பேச முடியாமல் நழுவி சென்றுள்ளார். இந்த காணொளி தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஏற்கனவே கோவை அடுத்த மதுக்கரையில் அரசு பேருந்தில் மூதாட்டி ஒருவரை ஓசி டிக்கெட் வேண்டாம் என்று பேச வைத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கிய அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மீதும் மூதாட்டி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் ஈரோடு மாவட்டம் ராயர் பாளையத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ யாரால் பதிவேற்றம் செய்யப்பட்டது? யாருடைய தூண்டுதலின் பேரில் பெண்கள் இவ்வாறு பேசியுள்ளனர்? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who provoked them Women rage against free bus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->