பாலியல் தொழிலாளிக்கு இருக்கும் உரிமை மனைவிகளுக்கு இல்லையா?! உயர்நீதிமன்றம் வருத்தம்.?! - Seithipunal
Seithipunal


திருமண உறவாக இருந்தாலும் கூட கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்வது குற்றச்செயல் என்ற வழக்கில், "பாலியல் தொழிலாளிக்கு கூட  விருப்பமில்லாத உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்க உரிமை இருக்கும் பொழுது, திருமணமான அல்லது ஆகாத பெண்களுக்கு அந்த உரிமை நிச்சயம் இருக்கிறது." என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் ஒரு பெண் மற்றும் ஆண் இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்தில் இந்திய கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கினை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளனர். ஜனவரி 7ஆம் தேதி இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பெண் சார்பில் வாதாடிய பொழுது மனைவியாக இருப்பினும் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டு அத்து மீறுவது குற்றம். 

இதுவும் பாலியல்ரீதியான அத்துமீறல் தான். திருமணம் என்ற பெயரில் நாட்டில் நிறைய பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது. ஆனால், அவற்றில் புகார்கள் அளிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். இதற்கு எதிராக எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொள்வது கடுமையான குற்றம். திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத பெண் இருவரும் சட்டத்தில் வெவ்வேறாக கருதப் படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கில், "பாலியல் தொழிலாளிக்கு கூட  விருப்பமில்லாத உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்க உரிமை இருக்கும் பொழுது, திருமணமான அல்லது ஆகாத பெண்களுக்கு அந்த உரிமை நிச்சயம் இருக்கிறது." என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why prostitute Rights equal not wife rights


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->