கொடூரம்! ஆத்திரத்தில் மனைவி,மாமியாரையும் வெட்டி கொன்ற மருமகன்!
Wife and mother in law hacked to death in Kerala
கேரளாவில் மனைவி மற்றும் மாமியாரை கோடாரியால் வெட்டி கொலை செய்த மருமகனை போலீசார் வலை வீசி தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டம் வளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது. இவருடைய மனைவி சல்மா. இவரது மகன் பஹத். சாகுல் ஹமீது மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்து கணவரிடம் கோபித்துக் கொண்டு கண்ணூர் மாவட்டம் முழங்குன்னு அருகே காக்காயங்காடு பகுதியில் உள்ள தாய் அலிமா வீட்டுக்கு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவருடன் அவருடைய மகன் பஹத்தையும் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் செல்மாவின் தாய் வீட்டுக்கு சாகுல் ஹமீது சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மனைவி மற்றும் மாமியாருடன் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஆதிரமடைந்த அவர் மனைவி மற்றும் மாமியாரை அருகில் இருந்த கோடாரியால் வெட்டி உள்ளார்.
இதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தனர். ஆத்திரத்தில் செய்த தவறுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சாகுல் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இந்த பயங்கர சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெரில் அங்கு சென்ற போலீசார் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனது குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் மாமியாரை சாகுல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சாகுல் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை தனிப்படை அமைத்து தீவிரமாக அவர் தேதி வருகிறார்கள். குடும்பத்தை மனைவி மட்டும் மாமியாரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Wife and mother in law hacked to death in Kerala