#மதுரை || கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கே.பரசுராமன்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி சித்ரா (23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த சித்ரா வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சேடப்பட்டி போலீசார், உயிரிழந்த சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சித்ராவின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife suicide due to family problem in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->