சேலம் : ஏற்காட்டில் திடீர் தீ விபத்தால் வன விலங்குகள் உயிரிழப்பு !
wild animals died in yercad forest for fire accident
சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத்தொடரில் 382.67 ச.கிமீ பரப்பளவு கொண்ட ஏற்காட்டில் நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி, வாழை, ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் உள்ளிட்டவை பொருட்கள் விளைகின்றன.
அதுமட்டுமல்லாமல், காட்டு விலங்குகளான காட்டு எருமை, மான், முயல்கள், நரிகள், கீரிப்பிள்ளை, அணில், கௌதாரி, பாம்புகள், குருவி, பருந்து உள்ளிட்டவையும் இங்கு வாழ்கின்றன.
இவ்வளவு இருக்கும் இந்த ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால், வனப்பகுதியில் உள்ள புற்கள், செடி, கொடிகள் உள்ளிட்ட அனைத்தும் காய்ந்துள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை இந்த ஏற்காடு வனப்பகுதியில் உள்ள குண்டூர் காட்டில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென காடு முழுவதும் பரவி அணைத்து மரங்களும் எரிந்து தீயில் கருகி வருகிறது. மேலும் வன உயிரினங்களும் தீக்கு இரையாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்தக் காட்டு தீ தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக பரவி வருவதால் தீயை அணைக்கும் முயற்சியில் அதிகளவு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்காட்டில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து தொடர்ந்து பரவுவதால் அதிகாரிகள் அனைவரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
wild animals died in yercad forest for fire accident