மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் நிறைவேறுமா? ரெயில்வே அமைச்சர் அமைச்சர் விளக்கம்..!
Will the Thoothukudi rail project be completed Railway Minister
மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசே காரணம் என செய்திகள் வெளியாகியிருந்தது. இதற்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில், 05 நாட்களுக்குப் பிறகு ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்
அதன்படி, மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தில் தமிழ்நாடு அரசிடம் எந்த நிலப்பிரச்னையும் இல்லை. கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள ICF-ல் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தொழிற்சாலையில் அதிக இரைச்சல் இருந்ததால் செய்தியாளரின் கேள்வி தெளிவாக கேட்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, 'தூத்துக்குடி' குறித்து கேட்கப்பட்ட கேள்வியை 'தனுஷ்கோடி' என புரிந்துகொண்டு நான் பதிலளித்தேன் என்றும் கூறியுள்ளார். ஆதலால், தனுஷ்கோடி ரயில்பாதை திட்டத்தையே சுற்றுச்சூழல், நிலப்பிரச்னை காரணமாக கைவிடுமாறு தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.
இது தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பமே தவிர, மதுரை - தூத்துக்குடி திட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை எனவும் அவர் மேலும் விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
Will the Thoothukudi rail project be completed Railway Minister