மதுரை || போலி சான்றிதழ் வழங்கிய ஜெராக்ஸ் கடை பெண் - ஆர்டிஓ புகாரில் சிக்கிய அவலம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை || போலி சான்றிதழ் வழங்கிய ஜெராக்ஸ் கடை பெண் - ஆர்டிஓ புகாரில் சிக்கிய அவலம்.!!

மதுரை மாவட்டத்தில் ஆர்டிஓ- வாக பணிபுரிந்து வருபவர் சிங்காரவேலு. இவர் லைசென்ஸ் (உரிமம்) மற்றும் ஆர்.சி புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சோதனை செய்துள்ளார்.

அப்போது சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆவணங்களில் சில ரத்த சோதனை சான்றுகள் போலியானது என்று தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் படி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த சான்றிதழ்கள் அருள்நகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றிலிருந்து வழங்கப்பட்டது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சோதனை செய்து, போலியான சான்றுகள் தயாரித்து வழங்கிய பழங்காநத்தம் வசந்த நகரை சேர்ந்த ஆனந்த் மனைவி பிரபா என்ற பெண்ணை கைது செய்தனர். 

அவரிடம் போலீசார், இதுபோல் அவர் எத்தனை பேருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார்? வேறு என்ன வகையான சான்றிதழ்களை போலியாக தயார் செய்து வழங்கியுள்ளார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for fake document provide in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->