திருவள்ளூர் || மதுபோதையில் தகராறு - கணவனின் கதையை தலையணையால் முடித்த மனைவி.!
woman arrested for kill husband in tiruvallur
திருவள்ளூர் || மதுபோதையில் தகராறு - கணவனின் கதையை தலையணையால் முடித்த மனைவி.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருகே வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ். இவர் கடந்த 11ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில், ரமேஷ் மூச்சுத் திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனால், போலீசாருக்கு ரமேஷின் மனைவி தங்க லட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் தங்க லட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், எனது கணவர் தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் என்னிடம் தகராறு செய்து வந்ததனால், ஆத்திரத்தில் கணவரின் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தங்கலட்சுமியை கைது செய்து, திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
English Summary
woman arrested for kill husband in tiruvallur