இளம்பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை அளித்த ஊர்காவல்படை வீரர் - ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்..! - Seithipunal
Seithipunal


தனக்கும் குழந்தைகளுக்கும் ஊர்காவல்படை வீரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சாந்தினி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால் இரு  குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவரது அருகருகே வசிக்கும் ஊர்க்காவல் படையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாந்தினிக்கும் அவரது பெண் குழந்தைகளுக்கும் தொடர் பாலியல் தொல்லை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. காவல் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தார். இதற்கும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த அவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தனது குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Attempt Suicide With Their Children Front of Collector office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->