விருதுநகர் : மாமியாருடன் பிரச்சனை.! காதல் திருமணம் செய்த பெண் தீக்குளிப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சனையில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் எட்டக்காப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (24). இவரும் குல்லூர்சந்தை பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கடந்த 2018ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் விஜயலட்சுமி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், பாலசுப்ரமணியனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து பாலசுப்ரமணியன் கடந்த ஆண்டு இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் விஜயலட்சுமியும், பாலசுப்பிரமணியனும் குல்லூர்சந்தை பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து பாலசுப்பிரமணியனின் தாய் மாரியம்மாளுக்கும், விஜயலட்சுமிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த விஜயலட்சுமி நேற்று வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பலத்த தீக்காயமடைந்த விஜயலட்சுமி மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman attempted suicide by setting herself on fire in virudhunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->