உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடிய தாய்.! - Seithipunal
Seithipunal


பட்டுக்கோட்டையில் பிரசவத்தின் போது உயிருக்கு போராடிய நிலையில் தன்னையும் தன் குழந்தையையும் காப்பாற்றிய அரசு மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளை மருத்துவமனை ஊழியர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆயிஷா சபானா என்பவர் திருமணத்திற்கு பிறகு தன் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவர் சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு வந்தபோது, திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால், ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஆயிஷா சபானாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் அவருக்கு மருத்துவர்கள் 4-1-23 அன்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். பின்னர் ஆயிஷாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து பலமணி நேரம் போராடி உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

அதே சமயம் குழந்தையும் மூச்சு திணறலால் அவதிப்பட்ட நிலையில் செயற்கை சுவாசம் அளித்து ஐந்து நாட்களுக்குப் பிறகு குழந்தையின் உயிரையும் காப்பாற்றினர். இந்த நிலையில், குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில் ஆயிஷா ஷபானா தனது குழந்தையின் பிறந்தநாளை தனது குழந்தையையும் தன்னையும் காப்பாற்றிய பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் கொண்டாட வேண்டும் என்று எண்ணினார். 

அதன் படி, அவர் சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு வந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருடன் கேக் வெட்டி குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடினார். இதுகுறித்து ஆயிஷா ஷபானா பேசுகையில், "இது எனது விருப்பம் மட்டுமல்ல எனது கணவருடைய விருப்பமும் இதுவாகத்தான் இருந்தது.

ஆகவே தான் பட்டுக்கோட்டைக்கு வந்து அரசு மருத்துவமனையில் எங்கள் இருவர் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரின் மத்தியில் எனது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடினேன். இது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman baby first birthday celebration in putukottai government hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->