திருமணமான ஒன்பதே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!
Woman Committed Suicide in Avadi
இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் அங்குள்ள பாத்திர கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தரண்யா என்ற மனைவி இருக்கிறார். சம்பவத்தன்று ஐயப்பன் வேலைக்கு சென்ற நிலையில் தனது மனைவிக்கு கைபேசியில் அளித்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் பயந்துபோன வீட்டு உரிமையாளருக்கு அழைத்து தரண்யாவை பார்க்குமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து அங்கு சென்ற வீட்டு உரிமையாளர் பார்த்தபொழுது தரண்யா தூக்கிட்டு நிலையில் சடலமாக தொங்கியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
English Summary
Woman Committed Suicide in Avadi