சென்னை : தவறுதலாக எலி மருந்து சாப்பிட்ட பெண் உயிரிழப்பு..!
Woman Death In Chennai
எலி மருந்து சாப்பிட்டு பெண் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் அந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, செங்குன்றத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகள் மேரி அங்குள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவரட்து வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் எலி மருந்தை உணவில் கலந்து வைத்துள்ளனர்.
இதனை அறியாமல் சில்வன மேரி, அந்த உணவை எடுத்து சாப்பிட்டு விட்டார். இதனால், அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.