சேலத்தில் சோகம் - சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.!
woman died for wall collapse in salem
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ். பிளாஸ்டிக் கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்த இவர் நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு விடாது மழை பெய்துள்ளதால் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் செந்தமிழ் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் தூங்கிக் கொண்டு இருந்த செந்தமிழ் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கட்டிட இடிபாடுகளை அகற்ற தொடங்கினர். மேலும், இது குறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
அந்தத் தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், செந்தமிழ் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
woman died for wall collapse in salem