கள்ளக்குறிச்சி.! விவசாய கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி சுசீலா (49). கொளஞ்சி நேற்று அலங்கிரி செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்சுவதற்காக சென்றார்.

இதையடுத்து அவரது மனைவியும், மகனும் இருசக்கர வாகனத்தில் விவசாய நிலத்திற்கு சென்று உள்ளனர். 

அப்பொழுது கிணற்றில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று பார்ப்பதற்காக சுசீலா கிணற்றை எட்டி பார்த்தபோது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்து உள்ளார்.

இதையடுத்து சுசிலாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே சுசிலா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman dies after falling into agricultural well in kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->