மக்களே உஷார் : சுத்தம் செய்துகொண்டிருந்தபோது பாம்பு கடித்து பெண் பலி!! - Seithipunal
Seithipunal


வீட்டுக்கு அருகே உள்ள காலி இடத்தை சுத்தம் செய்யும் போது பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காசியம்மாள் (50). இவர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது குப்பையில் இருந்த பாம்பு காசியம்மாளை கடித்துள்ளது.

பாம்பு கடித்ததால் அலறிய காசியம்மாலின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் காசியம்மாளை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மகள் இடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman dies of snake bite while cleaning


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->