நாம் விழித்தெழ வேண்டிய நேரம் இது - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு!
Woman Safety issue President Draupadi Murmu
பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, நாம் விழித்தெழ வேண்டிய நேரம் இது என்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
படுகொலை செய்யப்பட்ட முதுநிலை மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் நடக்கக்கூடிய போராட்டங்களை, அம்மாநில அரசு முடக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய மக்கள் விழித்து எழ வேண்டும். பெண்களை ஒரு பொருளாக பார்க்கின்ற நிலை உள்ளது.
பெண்கள் தங்களின் அச்சத்தில் இருந்து விடுதலைப் பெற வேண்டும். பெண்களுக்கு இருக்கும் தடைகளை நீக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் முன்னேறி வரக்கூடிய பெண்களுக்கு மனசோர்வை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டு மகள்கள், சகோதரிகள் இது போன்ற கொடுமைகளுக்கு ஆளவதை ஒரு நாகரிக சமூகம் அனுமதிக்க கூடாது. நாடு முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் பிசியோதெரபி பயிற்சியாளர் நியர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 12 ஆண்டுகளில் அதே போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
நாம் இன்னும் பாடம் கற்றுக் கொண்டோமா என்ற கேள்வி எழுகிறது. நாம் எங்கே தவறு செய்தோம், அந்த தவறுகளை நீக்க என்ன செய்யலாம். இத்தகைய கேள்விகளுக்கான பதில்கள் நாம் கண்டுபிடிக்கவில்லை என்றால், மக்கள் தொகைகள் பாதிப்பேர் சுதந்திரமாக வாழ முடியாது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Woman Safety issue President Draupadi Murmu