திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு கிளப்பிய மூதாட்டி: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


திருப்பூர், முத்துகவுண்டன் பாளையத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருக்காணி என்பவருக்கும் அவரது அக்காவிற்கும் சொந்தமான பூர்வீக சொத்து 5.30 ஏக்கர் நிலம் உள்ளது. 

இதனை இருவருக்கும் 2.75 ஏக்கர் பாகப்பிரிவினை செய்யப்பட்டு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருக்காணியின் அக்கா மற்றும் அவரது மகன் இருவரும் அருக்காணிக்கு சேர வேண்டிய நிலத்தை ஆக்கிரமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அருக்காணி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த அருக்காணி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்து அவரது மகனுடன் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். 

இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தி 2 பேரும் மீதும் தண்ணீர் ஊற்றி பேச்சு வார்த்தை நடத்தினர். 

பின்னர் அவர்களை மாவட்ட ஆட்சியர் விசாரணைக்காக அழைத்துச் சென்று மனு வழங்கப்பட்டது. தாய், மகன் இருவரும் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman tried set fire tirupur collectors office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->