பெரும் சோகம்! கோவில் திருவிழா கூட்டத்தில் திடீரென புகுந்த டிராக்டர்! அலறி ஓடிய மக்கள்! பெண் ஒருவர் பலி!
woman was killed when a tractor rammed into a temple festival gathering
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவில் திருவிழா கூட்டத்தில் டிராக்டர் புகுந்ததில் பெண் ஒருவர் பலியான சம்பவமும் அப்போதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவை சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது போரூர் ஜமுனாமரத்தூர் செல்லும் சாலையில் அத்திமூர் பாலத்தின் அருகில் திருவிழாவை முன்னிட்டு வானவேடிக்கைகள் நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஜமுனாமரத்தூரில் இருந்து போளூர் நோக்கி போளூர் அள்ளி நகரை சேர்ந்த அஜித் என்பவர் டிராக்டரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. பாலத்தின் அருகில் வரும் போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து வானவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் கூட்டத்தில் புகுந்ததுள்ளது.
இதில் பிரகாஷ் என்பவரின் மனைவி செம்பருத்தி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் நிவாரணம் கேட்டு இறந்த செம்பருத்தி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவிழா கூட்டத்தில் வானவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது சிறுவர் ஓட்டி வந்த டிராக்டர் ஏரி ஒரு பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
woman was killed when a tractor rammed into a temple festival gathering