திருச்செந்தூரில் குழந்தை கடத்திய பெண் காவல் நிலையத்தில் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜ்-ரதி தம்பதியினர் தங்களது ஒன்றை வயது மகன் ஹரிஷ் உடன் கடந்த செப்டம்பர் 28ஆம்தேதி குலசேகரபட்டினத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரதியுடன் நட்பாக பழகி அவருடன் திருச்செந்தூருக்கும் சென்றுள்ளார். 

அப்போது குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி ஹரிசை தூக்கிச் சென்றவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அந்த தம்பதியினர் அளித்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைத்து நடத்திய விசாரணையில் அந்த பெண் ஹெல்மெட் அணிந்து ஒருவருடன் பைக்கில் சென்றது சிசிடிவி காட்சின் மூலம் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் திலகவதி-பாண்டியன் தம்பதியை கோவை மாவட்டம் ஆலந்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திய போது திலகவதி திடீரென மயங்கி விழு அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. குழந்தை கடத்தல் சம்பவத்தில் கைதான பெண் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman who abducted child in Tiruchendur died in police station!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->