9 குழந்தைகளை பெற்ற பெண் மீண்டும் கர்ப்பம்;கருக்கலைப்புக்கு ஒத்துழைக்காததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


ஏற்கனவே 9 குழந்தைகளை பெற்றெடுத்த சங்கீதா என்ற பெண் ஒருவர், தற்போது மீண்டும் கர்ப்பமாகி குழந்தை பெறுவதற்கு தயாராகி வருவது சுகாதாரத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது அவர்  2 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த 40 வயதான  கூலித்தொழிலாளி கோபி . 35 வயதான இவரது மனைவி சங்கீதா, இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்து அடுத்தடுத்து 9 குழந்தைகளை சுக பிரசவத்தில் வீட்டிலேயே பெற்று எடுத்து உள்ளார் சங்கீதா.

இதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. மேலும் ஒரு குழந்தையை தத்து கொடுத்து விட்டனர்.இதையடுத்து  மீதமுள்ள 7 குழந்தைகளை சங்கீதா தம்பதி வளர்த்து வருகின்றனர். தற்போது சங்கீதா மீண்டும் கர்ப்பம் ஆனதால்  உடல்நிலை மோசமாகி விடும் என்பதால் கர்ப்பத்தை கலைத்துவிடு என்று அவர்களது உறவினர்கள், கூறி உள்ளனர்.

இதை தொடர்ந்து  கருக்கலைப்பு செய்வதற்கான முதல்கட்ட சிகிச்சையை எடுத்து உள்ளார் சங்கீதா .  இந்தநிலையில் திடீரென மனம் மாறிய சங்கீதா, கருக்கலைப்பு செய்வதற்கான மீண்டும் மாத்திரையை எடுத்து கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இது குறித்து மல்லசமுத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் பிரசாந்த் போலீசில் புகார் செய்தார்.

உடனடியாக சங்கீதாவை போலீசார் சமரசம் செய்து, கருக்கலைப்பு செய்வதற்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனாலும் அங்கு சங்கீதா டாக்டர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

 சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எவ்வளவோ சமரசம் செய்து பார்த்தும் கருக்கலைப்புக்கு ஒத்துழைப்பு வழங்காததால்  வேறு வழியின்றி நேற்று அவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.ஏற்கனவே 9 குழந்தைகளை பெற்றெடுத்த சங்கீதா, தற்போது மீண்டும் கர்ப்பமாகி குழந்தை பெறுவதற்கு தயாராகி வருவது சுகாதாரத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் அருகே மல்லசமுத்திரத்தில் 9 குழந்தைகளை பெற்ற பெண் மீண்டும் கர்ப்பமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருவை கலைக்க மறுத்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman who gave birth to 9 children becomes pregnant again; Health officials shocked by lack of support for abortion


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->