ஸ்ரீ பெரும்புதூர் அருகே இளம்பெண் உயிரிழப்பு - காதலனுக்கு வலைவீச்சு..!!
women dead body found in sri perumbuthur
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவரும், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த தீபன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இருவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் தீபன் நேற்று இரவு விக்னேஸ்வரியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் தேடி வந்துள்ளனர். அப்போது கொளத்தூர் சுடுகாடு நுழைவாயில் அருகே விக்னேஸ்வரி கீழே விழுந்து கிடந்துள்ளார். அவரை பார்த்தபோது விக்னேஸ்வரி உயிரிழந்தது தெரியவந்தது. உடனே விக்னேஸ்வரியின் உறவினர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி காவல்துறையினர் விரைந்து வந்து விக்னேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் முடிவில் இளம்பெண் விக்னேஸ்வரி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து போலீசார் விக்னேஸ்வரி ஆணவக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தலைமறைவான காதலன் தீபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
women dead body found in sri perumbuthur