திமுக மகளீர் அணியினருக்கு அம்மா உணவகத்தில் வேலை!
Work at Amma unavagam for DMK female team members
சொன்னை | கவுன்சிலர்கள் பரிந்துரை செய்தால் வேலை வழங்கப்படும்!
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நேரமில்ல நேரத்தின் போது மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளனர். அப்போது உறுப்பினர் பிரியதர்ஷினி "நான்காவது வார்டில் நடைபெற்று வரும் வடிகால்கள் பணியானது ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் மெத்தனமாக நடைபெற்று வருகிறது" என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா "சென்னை மழைநீர் வடிகால் பணியை வேகப்படுத்தியுள்ளோம். வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. மழை நீர் வடிகால்களை பிரதான வழிகள் உடன் இணைக்கும் பணி அக்டோபர் 10க்குள் முடிக்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும் மாமன்ற உறுப்பினர் ராணி "கடந்த அதிமுக ஆட்சியில் சேர்ந்தவர்கள் மட்டுமே அம்மா உணவகத்தில் வேலை செய்து வருகின்றனர். எங்கள் வார்டில் உள்ள திமுக மகளிர் அணி நிர்வாகிகளை அம்மா உணவகத்தில் பணி அமர்த்த வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா "அம்மா உணவகத்தில் மகளீர் சுய உதவி குழு மூலமாக வேலையாட்கள் அமர்த்தப்படுகின்றனர். தங்கள் பகுதியில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து மாமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை செய்தால் அம்மா உணவகத்தில் பணி வழங்கப்படும்" என பதிலளித்தார்.
யார் வேலை செய்தாலும் ஏழைகள் பசி போக்கும் அம்மா உணவகத்தினை மூடாமல் இருப்பதே நல்லது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
Work at Amma unavagam for DMK female team members