காத்திருப்பு பட்டியலில் இருந்து செவிலியர்களுக்கு பணி ஆணை.. முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.!
Work order for nurses from waiting list. Chief Minister Rangasamy presented
காத்திருப்பு பட்டியலில் இருந்து செவிலியர்களுக்கு பணி ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் வழங்கினார்.
சுகாதாரத்துறையில் கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 152 செவிலியர் பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கடந்த மாதம் வரை 133 செவிலியர்கள் புதுச்சேரியின் 4- பிராந்தியங்களிலும் பணியில் சேர்ந்து விட்டனர். பல்வேறு காரணங்களால் பணியில் சேராத 14 செவிலியர்களுக்கு பதில் காத்திருப்பு பட்டியலில் இருந்து தகுதி வாய்ந்த 14-செவிலியர்களுக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் வழங்கினார்.
பணி ஆணை பெற்றவர்கள் 25.04.2025க்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
English Summary
Work order for nurses from waiting list. Chief Minister Rangasamy presented