திரு.சார்லஸ் ராபர்ட் டார்வின் அவர்கள் நினைவு தினம்!.
Remembrance Day of Mr Charles Robert Darwin
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உலகுக்கு தந்த திரு.சார்லஸ் ராபர்ட் டார்வின் அவர்கள் நினைவு தினம்!.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உலகுக்கு தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.
அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.

இவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு இவருடைய கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்து வந்தது.
தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். இந்த ஆராய்ச்சி 1831ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது.
அதில் பலவகையான ஊர்வன, பறப்பன, நடப்பன என அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் மற்றும் தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் ஏராளமாகச் சேகரித்தார்.
தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உருவானது. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி On the Origin of Species என்ற புத்தகத்தை எழுதினார்.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி தனது 73வது வயதில் மறைந்தார்.
English Summary
Remembrance Day of Mr Charles Robert Darwin