புதுசா இருக்கு சூப்பர்!!! ஒலிபெருக்கி மூலம் தலைமை ஆசிரியர் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க கோரிக்கை விடுத்தார்...!!!
headmaster made request admit students government school through loudspeaker
ஆந்திரா ஏலூரு மாவட்டம் ஜிலு குமிலியடுத்த முலகம் பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 'ரமேஷ்பாபு' என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என புது விதமாக, தனது பைக்கில் ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி, குழந்தைகளின் பெற்றோர்களிடம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த போட்டோக்களை துண்டு பிரசுரமாக அச்சடித்து வழங்கி வருகிறார்.
மேலும் அரசு பள்ளியில், தனியார் மற்றும் கார்ப்ரேட் பள்ளிகளுக்கு இணையாக பாடம் கற்பிப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இவரது நூதன பிரசாரம் குழந்தைகளின் பெற்றோர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இது தற்போது மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
headmaster made request admit students government school through loudspeaker