தேர்வு மையத்தில் பூணூலை கழற்ற கூறிய அதிகாரி - மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள, சிவமோகா மாவட்டத்தில் பொது நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்றகோரிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தேர்வு நடத்தும் அதிகாரி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவிக்கையில், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 2 தேர்வு மையத்திலிருந்தும் இதுபோன்ற புகார்கள் வந்தது. 

இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான மையங்களில் தேர்வு சுமூகமாக நடைபெற்றது. நாங்கள் அனைத்து மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். நாங்கள் இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதற்கு தக்க நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

exam officer say remove poonool in karnataga


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->