வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... மதுரையில் அதிர்ச்சி சம்பவம்...! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் நெடுமதுரை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சங்கீதா (23). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராமச்சந்திரன் உயிரிழந்து விட்டதால் சங்கீதா, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதையடுத்து சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான ஆறுமுகம் (24) என்பவர், சங்கீதாவின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் சங்கீதா கூச்சலிடவே, சங்கீதாவின் சத்தம் கேட்டு உறவினர் மற்றும் பெற்றோர் ஓடி வந்துள்ளனர். இதைப் பார்த்த ஆறுமுகம் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சங்கீதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker arrested for sexually harassing a young woman in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->