கிருஷ்ணகிரியில் பயங்கரம்..! தலை துண்டித்து தொழிலாளி கொடூரமாக கொலை..! போலீசார் விசாரணை...! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் தலை துண்டித்து தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பீலாளம் பகுதியில் விபத்தில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு சூளகிரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, தலை இல்லாமல் உடல் மட்டும் கிடந்துள்ளது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை விவசாய நிலத்தில் ஆணின் தலை மட்டும் கிடந்துள்ளது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தலையை கைப்பற்றி இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த நபர் அகரம் பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி முருகேசன் (32) என்பதும், அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் மாமியார் ஊரான ஜோகிரிபாளையம் பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது மர்ம நபர்கள் யாரோ முருகேசனை கொடூரமாக தலை துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேசனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker brutally murder by beheading in kirishnagiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->