மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை! மன நோயினால் ஏற்பட்ட விபரீதமா? - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி, குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 79) இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அதில் ஆல்பின் ஜெபராஜ் (வயது 39) என்பவரை தவிர மீதி 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 

ஜெபராஜ்க்கு 10 ஆம் வகுப்பு படித்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இதனால் அவர் அடிக்கடி வீட்டிலிருந்து காணாமல் போய்விடுவார். அதுபோல் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து காணாமல் போய் 11 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தார். 

இந்நிலையில் கடந்த 11ம் தேதி மீண்டும் எங்கேயோ சென்று விட்டு பின்னர் அவர் நேற்று முன்தினம் தான் வீட்டிற்கு வந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு மேல் மாடி படுகை அறைக்கு சென்றார். 

இதனைத் தொடர்ந்து அவர் நேற்று காலை மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதனை பார்த்த அவரது தந்தை ராஜாமணி இது குறித்து குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆச்சாரியபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

worker committed suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->