மக்களே உஷார்! தூக்கிக்கொண்டிருந்தபோது குளிர்சாத பெட்டியில் கை உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி! - Seithipunal
Seithipunal


வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது குளிர்சாதனப்பட்டியில் கை உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே நகர் கிழக்கு வன்னியர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அதே பகுதியில் உள்ள நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டி அருகே நேற்று முன்தினம் வெங்கடேசன் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போதுக்கு குளிர்சாதன பெட்டியில் மின் கசிவை ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல் வெங்கடேசன் புரண்டு படுக்கும் போது குளிர்சாதன பெட்டியின் மீது  கை உரசியத்தில் மின்சாரம் தாக்கி வெங்கடேசன் அலறி துடிதுடித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்து அவரது மனைவி அக்கம்  பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்றுவந்த வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker died of electrocution after touching refrigerator while sleeping at home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->