கோவில் திருவிழாவில் சோகம்.! பட்டாசு வெடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறை பட்ட அருகே சுத்தமலை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சின்னமணி (35). இந்நிலையில் நேற்று முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றபோது, சின்னமணி பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் கையில் வைததிருந்த பட்டாசு வெடித்ததில் சின்னமணி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் சின்னமணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker killed in firecracker explosion at temple festival in kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->