தேனி || விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை
Worker suicide in theni
தேனி மாவட்டத்தில் விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள உப்புத்துரை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெயில்முத்து(48).
இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வெயில்முத்து தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து வெயில்முத்துவை மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வெயில்முத்து அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.