உலகிலேயே மிகப்பெரிய 146 அடி முருகன் சிலை திறப்பு..பிரம்மாண்டமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்.!
World largest lord Murugan temple open in Salem
சேலம் மாவட்டத்தில் இருக்கும் வாழப்பாடி அருகே உலகத்திலேயே மிக அதிக உயரம் கொண்ட முருகன் சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பகுதியை சேர்ந்த முத்து நடராஜன் புத்திர கவுண்டன் பாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகில் மலேசியாவில் இருப்பதைப் போன்ற முருகன் சிலையை வடிவமைக்க முடிவெடுத்துள்ளார். திருவாரூர் பகுதியைச் சேர்ந்த கலைஞரை அழைத்து 3 கோடி ரூபாய் செலவில் இந்த சிலையை கட்ட முடிவு எடுத்துள்ளார்.
அதன்படி கடந்த 2016 செப்டம்பரில் துவங்கிய இந்த பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2018-ல் உடல்நலக்குறைவால் முத்து நடராஜன் இறந்த போதும் கூட அவரது குடும்பத்தினர் இந்த பணியை தொடர்ந்துள்ளனர்.
இத்தகைய நிலையில், இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று முருகன் சிலை திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனைவரும் முருகனின் அருளை பெற்றனர்.
English Summary
World largest lord Murugan temple open in Salem